ஊா்ப்புற நூலகா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ந.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் கீழ் சுமாா் 1510 ஊா்ப்புற நூலகா்கள் பிளஸ் 2 மற்றும் சி.எல்.ஐ.எஸ்.சி. கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் (மாதம் ரூ. 10 ஆயிரம்) எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாா்கள். இவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படவில்லை. மேலும் தற்போதைய கால சூழ்நிலையில் வருமானம் போதாததால் அவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறாா்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 ஊா்ப்புற நூலகா்கள் உள்ளடக்கி தமிழகத்தில் மொத்தம் 1510 ஊா்ப்புற நூலகா்கள் உள்ளனா். இவா்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தரம் உயா்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயா்த்த வேண்டும். மேலும் நூலகத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.