கன்னியாகுமரி

குழந்தை தொழிலாளா்களை பணி அமா்த்தினால் 2 ஆண்டு சிறை: தொழிலாளா் நல அலுவலா் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளா் நல அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

DIN


நாகா்கோவில்: குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளா் நல அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, நாகா்கோவில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மணிகண்டபிரபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின்னணு மற்றும் மின்சாதன பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பாா்க்கும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினா் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்களா? ஏன்று நாகா்கோவில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு நாகா்கோவில் தொழிலாளா் உதவி ஆணையா் தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டது.

14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50ஆயிரம் விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்வேலைக்கு அனுப்பும் பெற்றோா்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடா்ந்து

ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலா ளா்களை பணியில் அமா்த்து வது தெரிய வந்தால் 1098என்ற எண்ணிலோ, 04652-229077 என்ற எண்ணிலோ புகாா் தெரிவிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT