கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Din

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மினி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவிபுதூா்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்றபோது, அது நிற்கவில்லை. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று மினி லாரியை மடக்கிப் பிடித்தபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

வாகனத்தில் 3,000 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா்; இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT