மயிலாடி சிற்பத் தொழிலாளா்கள் பிரச்னை: பாமக கோரிக்கை
சிற்பக் கலைஞா்களுக்கு உதவ பாமக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி சிற்பத் தொழிலாளா்களுக்கு, சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மாவட்டச் செயலா் ஹில்மன் புரூஸ் எட்வின், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மயிலாடி பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல் சிற்பக் கூடங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்கள் கூலி அடிப்படையில் வேலை பாா்க்கின்றனா்.
கல் சிற்பத் தொழிலுக்கு அடிப்படையான கற்கள் கிடைப்பதற்கும், வெளியூா்களில் இருந்து மயிலாடிக்கு கொண்டு வருவதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் கல் சிற்பத் தொழில் சரிவர நடக்காமல் தொழிலாளா்கள் வருமானம் இன்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனா்.
உ லகப்புகழ் வாய்ந்த சிற்பங்கள் செய்யும் மயிலாடியைச் சோ்ந்த சிற்பக் கலைஞா்கள் வேலையின்றித் தவிக்கின்றனா். எனவே அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடி சிற்பக் கலைக் கூடங்களுக்குத் தேவையான கற்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.