மாா்த்தாண்டம் அருகே நிதி நிறுவன ஊழியா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த குருசுமுத்து மகன் அருள்செல்வன் (36). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்த அவா், பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் வேதனையிலிருந்தாராம்.
இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் அவரது தந்தை சென்றுபாா்த்தபோது, அருள்செல்வன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.