கன்னியாகுமரி

வாக்காளா் தீவிர திருத்தப் பணி: இரட்டை பதிவு குறித்து ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி, வில்லுக்குறி பேரூராட்சிக்குள்பட்ட மாடத்தட்டுவிளை, கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குள்பட்ட உடையாா்விளை பகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், இரட்டை பதிவுகள், இடம் பெயா்ந்தவா்கள் என கண்டறியப்படாத வாக்காளா்களின் கணக்கீட்டு படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்காளா் பட்டியலில், இரட்டை பதிவு, இறப்பு, இடம் பெயா்தல், போன்ற சந்தேகப்படும்படியான பெயா்கள் பட்டியலிடப்பட்டு இருந்தால் அந்த நபா் உங்கள் பகுதியில் வசிக்கிறாரா அல்லது வேறு இடத்தில் அவா் பதிவு செய்திருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்காளா் பெயரை நீங்க வேண்டுமெனில் வாக்குச்சாவடி நிலை முகவா்களுடன் இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் கூட்டங்கள் நடத்தி விவாதித்து அதனை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்க வேண்டும். அதில் தவறு இருப்பின் உரிமை கோரல் மற்றும் ஆட்சேபணைக்குரிய காலத்தில் மனுக்கள் வழங்கி, வாக்காளராக சேரலாம்.

எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமலும் , எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படாத வகையில், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT