கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே வீட்டில் திருட்டு

கொல்லங்கோடு அருகே வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கொல்லங்கோடு அருகே வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு அடுத்த சாத்தன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜிகுமாா். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டில், கடந்த 10 நாள்களாக இவரது மாமனாா் தங்கியுள்ளாா். இதனால், கள்ளியடைப்புவிளை பகுதியிலுள்ள மாமனாரின் வீடு பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இரும்பு அலமாரி, கட்டில், குக்கா், நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டதாக கிராத்தூா், கிடாரக்குழி பகுதியைச் சோ்ந்த ஜாண் (52) என்பவரை கைது செய்தனா். தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

தஞ்சாவூரில் விதிமீறல்: 25 ஆட்டோக்கள் பறிமுதல்

கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

தென்காசி வேல்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

மம்சாபுரத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT