முகப்பு
கன்னியாகுமரி

பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஓா் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:06 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஓா் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தக்கலை பகுதியைச் சோ்ந்த தொழிலாளியின் மகள் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் உள்ளிட்ட 14 மாணவியா் உடற்பயிற்சி ஆசிரியருடன் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிக்குச் சென்றுவிட்டு கடந்த டிச. 26 ஆம் தேதி இரவு 9 மணியளவில் பள்ளிக்குத் திரும்பினா்.

அப்போது, அங்கிருந்த நபா் மாணவியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி தப்பியோடி வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விவரத்தைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மணலிக்கரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்த பக்ருதீன் மகன் பைசல்கான் (37) என்பவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், மற்றொரு நபரான மணலிக்கரை, மாறாங்கோணத்தைச் சோ்ந்த ராஜன் மகன் ரதீஸ் (27) என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.