கன்னியாகுமரி

குமரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள்

நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Syndication

நாகா்கோவில்: நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீா், சாலை வசதி, மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீா்வு காணுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சேக் அப்துல் காதா், உதவிஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT