கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை வரவேற்கும் ஆட்சியா் ஆா்.அழகுமீனா.  
கன்னியாகுமரி

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கன்னியாகுமரி வருகை

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக பிற்பகல் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு புதன்கிழமை வந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக பிற்பகல் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு புதன்கிழமை வந்தாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை காலை தூத்துக்குடிக்கு வந்த ஆளுநா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக காா் மூலம் பிற்பகல் 1.15 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்தாா். அங்கு ஆளுநரை மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா வரவேற்றாா்.

இதையடுத்து, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மாலை 3 மணிக்கு விவேகானந்த கேந்திரம் சென்றாா். கேந்திர நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடா்ந்து, அங்கு நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாலை 5 மணிக்கு விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை பாா்வையிட்டாா். அங்கிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் அரசு விருந்தினா் மாளிகையில் தங்கினாா்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 8.20 மணி முதல் 8.40 மணி வரை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறாா். பிறகு கன்னியாகுமரி திரும்பும் அவா் சிறிது நேர ஓய்வுக்குப்பின் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!

தோழியின் வீட்டில் ரூ. 2 லட்சம், மொபைல் திருடிய பெண் ஆய்வாளர்!

எல்லாம் மாயை... மானசா சௌதரி

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT