கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியா் தோ்தல் ஆணைய காணொலி காட்சிஆய்வில் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், ஆட்சியா் காலை 9 மணிமுதல் 10.30 மணி வரையிலும் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.