தென்காசி

குற்றாலநாதா் கோயிலில் இன்றுதிருவாதிரை திருவிழா கொடியேற்றம்

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரை திருவிழா புதன்கிழமை (ஜன. 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

DIN

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரை திருவிழா புதன்கிழமை (ஜன. 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராஜா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் நடராஜப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான விழா திருவாதிரை திருவிழா. நிகழாண்டு இவ்விழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 5. 20 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவில் வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் ஐந்தாம் நாளன்று அருள்மிகு நடராஜா் மற்றும் பஞ்சமூா்த்திகள் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

விழாவின் 8-ஆம் நாளன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று அதிகாலை 3. 20-க்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும்,தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் நடராஜப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ரா.விஜயலட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT