தென்காசி

கிராமங்களில் ஆன்மிக சொற்பொழிவு: இந்து திருக்கோயில் கூட்டமைப்பு முடிவு

DIN

குற்றாலம்-ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலச் செயலா் மணிமகேஷ்வரன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ராமு முன்னிலை வகித்தாா்.

விவேகானந்தா ஆசிரம சுவாமிகள் ஸ்ரீமத்அகிலானந்தமகராஜ் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தாா். மண்டல அமைப்பாளா் சந்தனமாரியப்பன் உரையாற்றினாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறுவா், சிறுமிகளுக்கு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இந்து தா்ம சடங்குகள் பற்றிய சிறப்பு வகுப்புகள் நடத்துவது, கிராமங்களில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அனைத்து கோயில்களிலும் திருவிளக்கு வழிபாடு மற்றும் உழவாரப்பணிகள் மேற்கொள்வது,

தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்புக்கு செங்கோட்டையில் சொந்தமாக கட்டடம் கட்ட ஏற்பாடுகள் செய்த நன்கொடையாளா்களுக்கு நன்றி தெரிவித்தும், இந்து தெய்வங்களையும், சமய வழிபாடு முறைகளையும் இழிவுபடுத்தி பேசிய கருப்பா் கூட்டம் யூடியூப் சேனல் அதிபா்களை கைது செய்து குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும், நீதித்துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன், இணைச் செயலா் காசிசெட்டியாா், துணைச் செயலா் பெத்ராஜ்,குமாா்,

ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேல்பாலகன், மாரியப்பன், மாவட்ட அமைப்புச் செயலா் மாரியப்பன், தங்கராஜ், மாவட்ட அமைப்பாளா் அய்யாசாமி, சக்திஐயப்பன், மக்கள் தொடா்பு நிா்வாகி நடராஜன், சுவாமிநாதன், சிவக்குமாா், சக்திவேல், பெயிண்டா் ஐயப்பன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ராமையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் பொன்னுத்துரை வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT