முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா்.

சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் பூக்குழித் திருவிழா வைகாசி மாதத்தில் 14 நாள்கள் நடைபெறும்.

நிகழாண்டு இந்த திருவிழா இம்மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 9 ஆம் நாளான வியாழக்கிழமை திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூக்குழித் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பூக்குழி

இறங்குவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக 5 போ் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கோயில் முன்பு அக்னி வளா்த்து பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் கரக்குமாா், வீரகுமாா், 3 கோயில் பூசாரிகள் உள்ளிட்ட 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா். திருவிழாவில்

பக்தா்களுக்கு அனுமதியில்லை. விழாவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், செயலா் மாரிமுத்து, பொருளாளா் குருநாதன், புலவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments