தென்காசி

கீழப்பாவூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

DIN

பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியப்பகுதிக்குள்பட்ட 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஒன்றியக்குழு உறுப்பினர், 21 ஊராட்சி மன்ற தலைவர், 213 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்.7ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை ஆலங்குளம் சர்தார்ராஜா பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெறுகிறது.  மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை காலை 8-45 மணிக்கு தொடங்கியது.

முதலில் வேட்பாளர்கள் முன்னிலையில் தபால் ஓட்டுகள் பிரிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து வாக்கு சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெற்றது. பின்னர் ஊராட்சி வாரியாக பிரித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT