குருத்தோலை ஞாயிறையையொட்டி சிலுவைகளை கையில் ஏந்தி சென்ற பக்தர்கள் 
தென்காசி

குருத்தோலை ஞாயிறையையொட்டி சிலுவைகளை கையில் ஏந்தி சென்ற பக்தர்கள்

ஆலங்குளம், நல்லூர், அடைக்கல பட்டணம், ஊத்துமலை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது. 

DIN

ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையையொட்டி திரளானோர் குருத்தோலைகளாலான சிலுவைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன் வரும் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. தவக் காலத்தின் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. 

சகரியாவின் தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார்.
 
யூதர்களின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என வழி நெடுக வரவேற்றனர்.  அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது. 

இதை நினைவு கூறும் வண்ணம் ஆலங்குளம், நல்லூர், அடைக்கல பட்டணம், ஊத்துமலை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது. 

சிறுவர்-சிறுமியர் உள்பட திரளானோர் கலந்துகொண்டு குருத்தோலைகளால் செய்யப்பட்ட சிலுவைகளை கையில் ஏந்திய படி ஓசன்னா பாடுவோம், பவனி செல்கிறார் ராஜா உள்ளிட்ட பாடல்களை பாடி வீதிகள் தோறும் ஊர்வலமாகச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT