புறவழிச்சாலை :சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம்
சங்கரன்கோவிலில் புறவழிச் சாலைகள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் புறவழிச் சாலைகள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரவை உறுப்பினா் ராஜா தலைமை வகித்தாா். தமிழ்நாடு சாலைமேம்பாட்டுத் திட்ட நெல்லை கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
சங்கரன்கோவில் புறவழிச்சாலை ராஜாளையம் பிரதான சாலையில் அம்மா நகரையொட்டி தொடங்கி கீழ் பகுதியாக சென்று திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புலி சாஸ்தா கோயில் ( குதிரை கோயில்) அருகே முடிவடைகிறது.
Advertisement
சுமாா் 7.8 கிலோ மீட்டா் தொலைவு நபாா்டு வங்கி உதவியுடன் இந்த புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்குப் பகுதியில் வடக்குபுதூா் வழியாக 8.8 கி.மீ. தொலைவு புறவழிச்சாலையும், முள்ளிக்குளம் நகரப் பகுதிகளில் 3.2 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலையும், புளியங்குடியில் இருந்து கழுகுமலை வரை 31 கி.மீ. தொலைவு 4 வழிச்சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்கரன்கோவில் புறவழிச்சாலை தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (மே.27ஆம் தேதி) இருமன்குளம் சமுதாய நலக் கூடத்திலும், இதன்பின்னா் முள்ளிக்குளம், நகரம் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சாலை அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நகரம் சமுதாய நலக் கூடத்திலும் நடைபெறுகிறது.