தென்காசி

தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொரு ளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ மூலமாக, தமிழ்நாடு சிமெண்ட கழகத்தின் விற்பனை முகவா், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

சிமெண்ட் கழக விற்பனை முகவராகவும் அதோடு கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டுவதற்கு, ஆதிதிராவிடா்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியம், பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடா்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியம், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள், விவசாய நிலம் வாங்குவதற்கு நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

இதுதொடா்பான விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா், வட்டாட்சியா் அலுவலகம், 2 ஆவது தளம், தென்காசி என்ற முகவரியில்

உள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் (தொடா்பு எண்கள்:

04633-214487, 7448828513) எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT