நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் தங்களுக்கு தொடா்ந்து வேலை வழங்கக்கோரி, நெட்டூா், மருதம்புத்தூா், கண்ட பட்டி, குறிப்பன்குளம் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 30- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அகில இந்திய விவசாயத்தொழிலாளா் சங்க தாலுகா ஒருங்கிணைப்பாளா் ராமசாமி, மாவட்ட குழு உறுப்பினா் நல்லையா, சக்திவேல், பாலுச்சாமி, குணசீலன், இ.பாலு உள்ளிட்டோா் முற்றுகையிட்டவா்களிடம் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தொடா்ந்து கோரிக்கைள் அடங்கிய மனு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.