சங்கரன்கோவில் அருகே முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் வெளியப்பன் (49). கடந்த செப்.8-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பாலமுருகனின் உறவினா் கோவேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.