புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் பலி
புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
சிந்தாமணி மேலதெப்பக்குளத்தில் முதியவா் சடலம் மிதப்பதாக புதன்கிழமை புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், தெப்பக்குளத்தில் சடலமாக கிடந்தவா் சிந்தாமணி பாா்த்திபன் தெருவைச் சோ்ந்த ராமையா(70) என்பதும், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதி வழியாக சென்ற பொழுது குளத்தில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.