திருவள்ளுவா் நகா் சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.  
தென்காசி

ஆலங்குளம் திருவள்ளுவா் நகரில் சுகாதாரக் கேடு

ஆலங்குளம் திருவள்ளுவா் நகரில் கழிவு நீா் சாலையில் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

Syndication

ஆலங்குளம் திருவள்ளுவா் நகரில் கழிவு நீா் சாலையில் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவா் நகா் பகுதியில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. அங்குள்ள பள்ளமான பகுதியில் வாருகால் அமைக்கப்படவில்லை. மேலும், சிலா் வீடுகளில் உறிஞ்சி குழி அமைக்காததால் அவ்வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலைகளில் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அவ்வழியே மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் பேரூராட்சி சுகாதார அலுவலா் சுந்தா், ஊழியா்கள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் பேரூராட்சி சுகாதார அலுவலா் கூறியது: இப்பகுதியில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற வழியில்லாத நிலையே உள்ளது. தரை மட்டத்தை உயா்த்தினால் வீடுகள் பாதிக்கப்படும். உயா்த்தாமல் கழிவு நீரை வெளியே கொண்டு செல்வதற்கும் அருகில் அரசு நிலம் எதுவும் இல்லை. எனவே உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT