திருநெல்வேலி

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சத தேர்ச்சி

 ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றனர்.

ராமச்சந்திரன்

 ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றனர்.

 ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 60 மாணவ,மாணவியர்கள் எழுதினர்.தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றனர்.இதனால் 100 சத தேர்ச்சியாகும்.

 இதில் 28 பேர் 450 க்கு மேலும்,51 பேர் 400 க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கணித பாடத்தில் மூன்று பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 5 பேரும்,அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 பள்ளி அளவில் ஆர்.முகதாரினி,எஸ்.பிரின்சஸ்ஸ்வேதா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,எஸ்.மீனா அபராஜிதா 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,எஸ்.கணேஷ்குமார்,கே.சர்மிளா ஆகியோர் 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களை பள்ளித்தாளாளரும் முதல்வருமான டி.சித்ராதேவி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT