திருநெல்வேலி

சரிந்து வரும் குண்டாறு அணை நீர்இருப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் குண்டாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. 

DIN

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் குண்டாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. 
நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர்ந்து பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்தவாறு உயரவில்லை.
செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணையின் கொள்ளளவு 36.10 அடி.
இந்த அணையில் இருந்து 12 குளங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும்  1,122 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. செங்கோட்டையை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம
மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்இருப்பு படிப்படியாக உயர்ந்து
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நீர்மட்டம் 28.50 அடியாக இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT