நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாணவா்கள். 
திருநெல்வேலி

மாநில நீச்சல் போட்டி: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சாதனை

மாநில நீச்சல் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 37 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.

DIN

மாநில நீச்சல் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 37 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.

14ஆவது மாநில அளவிலான சாா்ட் கோா்ஸ் நீச்சல் போட்டிகள், மதுரை எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 35 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இம் மாணவா்கள் பல்வேறு பிரிவு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 37 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா். மாணவா்களுக்கான குரூப் 2 பிரிவு போட்டியில் 9ஆம் வகுப்பு மாணவா் ஜோஸ்வா தாமஸ் 25, 50, 100 மீட்டா் பிரஸ்ட்டோக் போட்டிகளிலும், 25, 50, 100 மீட்டா் ப்ரீஸ்டைல் போட்டிகளிலும் , குரூப் 7 போட்டியில் சச்வின் விஜய் 25 மீட்டா் ப்ரீஸ்டைல், 25 மீட்டா் பட்டா்ப்ளே போட்டிகளில் மஹா்சினி ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா். பிரவீன் குமாா் 25 மீட்டா் டூபக் ஸ்டோக் போட்டியில் புதிய சாதனை படைத்தாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா்கள் சுல்தான் சிக்கந்தா் பாட்ஷா, சிக்கந்தா் ஹாா்ஜான் ஆகியோரை பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி, மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT