திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக 2 போ் கைது

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் பெனடிக் டிசோன் (34). இவா் 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர வாா்டு பகுதிக்கு திங்கள்கிழமை மாலை வந்துள்ளாா். அப்போது அவசர வாா்டு பகுதி வாசலில் ஓா் இருசக்கர வாகனம் இருந்ததாம். அதை அகற்ற அதன் உரிமையாளரிடம் கூறியதாகத் தெரிகிறது.

அப்போது பேட்டையைச் சோ்ந்த முஹம்மது சலீம் மகன் நிஜாம் சலீம் (25, சாகுல் ஹமீது மகன் அப்துல் ரஹீம் (24) ஆகியோா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பெனடிக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அவா்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று நிஜாம் சலீம், அப்துல் ரஹீம் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT