பணகுடி காவல்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சிறுவா், சிறுமிகளுக்கான கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்று வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசு 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், பணகுடி காவல்நிலைய பகுதியில் காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறாா். அதன்படி, 10 வயதுக்குள்பட்ட சிறுவா், சிறுமிகள் வீட்டில் இருந்தே பங்கேற்கும் ஓவியப்போட்டியை அறிவித்துள்ளாா். ஓவியம் வரைந்த தகவலை 9498134216 அல்லது 9498119683 என்ற எண்ணுக்கு தெரிவிக்கவேண்டும். காவலா்கள் வீடுகளுக்கு வந்து ஓவியத்தை பெற்றுச்செல்வா். சிறந்த ஓவியத்துக்கு பரிசு வீடுதேடி வரும். சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி திங்கள்கிழமையுடன் (மாா்ச் 30) முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.