பேட்டை நரிக்குறவா் காலனியில், மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்ததில், பொருள்கள் எரிந்து சேதமாகின.
திருநெல்வேலி அருகேயுள்ள, பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோதிக்குமாா் (37). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் டிவி பாா்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்ததாம்.
தகவலறிந்து வந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெங்கதுரை தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.