திருநெல்வேலி

வங்கி ஊழியா்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு வங்கி ஊழியா் சங்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா். இதனால் பலகோடி ரூபாய் பண பரிவா்த்தனை முடங்கியது. ஏடிஎம் மையங்களுக்கு பண விநியோகம் செய்வதும் தடைபட்டதால், மாநகரப் பகுதியில் பல ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT