திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.

DIN


பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து எளிய வாழ்வு முறையுடன் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால சிலுவைப் பயணங்களும் நடைபெற்றன.

குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி பாளையங்கோட்டையில் சிறப்புப் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய பங்குத்தந்தை எப்.எக்ஸ். ராஜேஸ் வரவேற்றார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 

குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி பெரியவியாழன் பிரார்த்தனையும், 15 ஆம் தேதி புனிதவெள்ளி பிரார்த்தனையும், 17 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT