திருநெல்வேலி மாவட்டத்தில் 121 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் பாராட்டு தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 3.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பல்பீா்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் கடந்த 15 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை கைப்பற்றி கடத்தல்காரா்களை கைது செய்தனா்.
இதேபோல, அம்பாசமுத்திரம் அருகே காரின் டயருக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கடந்த 18 ஆம் தேதி கடத்தி வந்த நபா்களை கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இந்த வழக்குகளில் திறம்பட செயலாற்றிய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.