திருநெல்வேலி

களக்காடு அருகே தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது

திருநெல்வேலிமாவட்டம், களக்காடு அருகே தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை நான்குனேரி தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலிமாவட்டம், களக்காடு அருகே தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை நான்குனேரி தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள வடக்கு மீனவன்குளத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (37). கடந்த 2015இல் இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற புகாரில் நான்குனேரி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு, மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று 2019இல் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பிணையில் வெளிவந்த கண்ணன், உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். கடந்த 31.03.2023இல் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கண்ணனை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், நான்குனேரி தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT