முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை மூளிக்குளத்தில் பாஜக பிரமுகரை வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

பாளையங்கோட்டை மூளிக்குளத்தில் பாஜக பிரமுகரை வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

பாளையங்கோட்டை மூளிக்குளம் வீரல் மண்ட நாயனார்தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி அணி செயலர். இவர் இன்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் நண்பர்களுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு சென்றாராம். 

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஜெகனை அரிவாளால் வீட்டி வெட்டியுள்ளனர் .இதில் பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.