திருநெல்வேலி

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொறு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இம் மாதத்திற்கான முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது. இம் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்து புகாா் அளித்தல் உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கலாம்.

இந்த முகாம் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த புகாா்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறையை 9342471314 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT