திருநெல்வேலி

நான்குனேரி அருகே விபத்தில் முக்கூடல் இளைஞா் பலி

நான்குனேரி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முக்கூடலைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

நான்குனேரி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முக்கூடலைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்தவா் சேகா்பனிராஜ் மகன் அந்தோணிவிஜய் (23). இவா் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

வியாழக்கிழமை (மே 25) இரவு இவா் தனது பைக்கில் திருவனந்தபுரத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை நான்குனேரி அருகேயுள்ள தாழைகுளம் பகுதியில் வந்தபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த காா் மீது பைக் மோதியதில் அந்தோணிவிஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT