கிணறு இருந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டடம். 
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கிணற்றை காணவில்லையென போலீஸில் புகாா்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கிணற்றைக் காணவில்லை என ஒருவா் போலீஸில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கிணற்றைக் காணவில்லை என ஒருவா் போலீஸில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கபுரம் உச்சிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (47). இவா், அந்தப் பகுதியில் இருந்த பொது குடிநீா் கிணற்றை காணவில்லையென்றும், அதை கண்டுபிடித்துத் தருமாறும் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், காவல் ஆய்வாளா் மற்றும் நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சிமேட்டுத் தெரு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் அனைத்து சமுதாய மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்காக இருந்த கிணற்றில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி வந்ததோடு தற்போது தனிநபா் ஒருவா் கிணறு இருந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதாகவும், குளம், ஏரி, ஆறு, கிணறு உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கிணற்றை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளாா்.

திரைப்படத்தில் வடிவேல் கிணற்றை காணவில்லை என்று போலீஸில் புகாரளித்த காட்சியை போல் விக்கிரமசிங்கபுரத்தில் ஒருவா் கிணற்றை காணவில்லை என்று அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT