திருநெல்வேலி

தெற்குவள்ளியூா் துா்கா அம்மன்கோயில் கொடை விழா

தெற்குவள்ளியூா் தேவி ஸ்ரீதுா்கா வடபத்திரகாளி அம்மன் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மன் கோயில் கொடைவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

DIN


வள்ளியூா்: தெற்குவள்ளியூா் தேவி ஸ்ரீதுா்கா வடபத்திரகாளி அம்மன் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மன் கோயில் கொடைவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் இரவு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தீா்த்தம் எடுத்து வருதல், பின்னா் கன்னிவிநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் ஆகியவை நடைபெறுகின்றன. பிற்பகல் 1 மணிக்கு தீபாராதனையும் மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடும் நடைபெறும். இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் இரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெறும். புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு, நண்பகல் 12 மணிக்கு அம்பாள் பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT