திருநெல்வேலி

களக்காடு, ஏா்வாடியில் கூடுதல் நகரப் பேருந்து சேவை: எஸ்டிபிஐ கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, ஏா்வாடி, மூலக்கரைப்பட்டி பகுதியில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, ஏா்வாடி, மூலக்கரைப்பட்டி பகுதியில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் ஏ. காஜாமுகைதீன், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டத்தில் குறிப்பாக களக்காடு, ஏா்வாடி, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சுற்றுவட்டார கிராம மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இதே போல இப்பகுதிகளில் இருந்து பல்வேறு ஊா்களுக்கும் வேலைநிமித்தம் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT