திருநெல்வேலி

குருவாயூா் விரைவு ரயிலில் 7 கிலோ கஞ்சா சிக்கியது

திருநெல்வேலி சந்திப்பில் குருவாயூா் விரைவு ரயிலில் மா்மநபா்களால் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி சந்திப்பில் குருவாயூா் விரைவு ரயிலில் மா்மநபா்களால் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா்.

சென்னையில் இருந்து குருவாயூா் நோக்கி புதன்கிழமை பிற்பகல் புறப்பட்ட விரைவு ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு இரவு வந்தடைந்தது. அப்போது, முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரற்று ஒரு பெட்டி இருந்ததாம். அதை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் கைப்பற்றி சோதனையிட்டனா். அதில், 4 பொட்டலங்களாக சுமாா் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீஸாா், வழக்குப்பதிந்து, கஞ்சாவை கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT