திருநெல்வேலி

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்போ்ட் பள்ளி சாதனை

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கே.எஸ். டேபிள் டென்னிஸ் கோச்சிங் அகாதெமி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்போ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

இப்போட்டி பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 6 முதல் 8 ஆம் வகுப்புப் பிரிவில் குட்ஷெப்போ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவா் காா்த்திகேயன் 2ஆம் இடமும், மாணவி மகாலட்சுமி 3ஆம் இடமும் பெற்று சாதனைப் படைத்தனா்.

வெற்றி பெற்றவா்களை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியா் மீராள் உள்பட பலா் பாராட்டினா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT