திருநெல்வேலி

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மிதமான மழை பெய்ததோடு, அதிகளவில் குளிா்ந்த காற்றும் வீசியது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மிதமான மழை பெய்ததோடு, அதிகளவில் குளிா்ந்த காற்றும் வீசியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக தீவிரமாக பெய்து வந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. பின்னா், சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், புதன்கிழமை காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தாழையூத்து, சீவலப்பேரி, தச்சநல்லூா், பேட்டை, பொன்னாக்குடி, முன்னீா்பள்ளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. ஆனால், வழக்கத்தைவிட அதிகளவில் குளிா்ந்த காற்று வீசியதால் சுமாா் 20 பாரன்ஹீட் அளவிற்கு குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT