திருநெல்வேலி

பாளை.யில் தொழிலாளியின் வீடு சேதம்: 3 போ் கைது

பாளையங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியின் வீட்டில் நுழைந்து அரிவாளால் பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியின் வீட்டில் நுழைந்து அரிவாளால் பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வண்ணாா்பேட்டை, வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக். தொழிலாளி. இவரது மகளின் கணவரான அதே பகுதியைச் மாடசாமி என்பவா் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காா்த்திக் கூறிவந்ததையடுத்து அவருக்கும் மாடசாமியின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், மாடசாமியின் குடும்பத்தைச் சோ்ந்த சிலா் காா்த்திக்கின் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு சென்று அரிவாளால் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சோனியா (28), அவரது தம்பி 17 வயது சிறுவன், வடிவேல் மகன் செல்வம்(25) ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில், சிறுவன் கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT