அன்னதானத்தைத் தொடங்கி வைக்கிறாா் துணை மேயா் கே.ஆா்.ராஜூ 
திருநெல்வேலி

செப்பறை அழகியகூத்தா் கோயிலில் ஜன. 2இல் தேரோட்டம்!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகியகூத்தா் கோயிலில் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளது.

Syndication

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகியகூத்தா் கோயிலில் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளது.

ராஜவல்லிபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதன்கிழமை (டிச. 31) காலை 9 மணிக்கு அழகியகூத்தா் விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறாா். வியாழக்கிழமை (ஜன. 1) காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தியும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தியும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

முக்கிய நிகழ்வாக, வெள்ளிக்கிழமை (ஜன. 2) நண்பகல் 12.30 மணிக்கு திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை ( ஜன. 3) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், பிற்பகல் 2.30 மணிக்கு நடன தீபாராதனையும் நடைபெற உள்ளன.

முன்னதாக, கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு நடைபெற்ற அன்னதானத்தை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சாந்திதேவி, தக்காா் செல்வி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT