திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உணவக உரிமையாளரிடம் ரூ.72 ஆயிரம் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்தவா் சம்சுதீன் (62). இவா், விக்கிரமசிங்கபுரத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். தினமும் இரவு வியாபாரம் முடிந்ததும் பேருந்தில் திருநெல்வேலிக்கு வந்து ஊா் திரும்புவது வழக்கமாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அவா், சங்கரன்கோவில் பேருந்தில் ஏறியபோது, தனது பையிலிருந்த ரூ.72 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.