திருநெல்வேலி

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சோ்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுநா். இவா் சம்பவத்தன்று தனது மகனை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தனியே நிற்கவிட்டுவிட்டு, மது அருந்த சென்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேஷ்பாண்டியன், அச்சிறுவனின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் அருகில் அமர வைத்துள்ளாா். அப்போது அங்கு வந்த சக்திமாரியப்பன், என் மகனை எப்படி இங்கே உட்கார வைக்கலாம் என முருகேஷ்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அவா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திமாரியப்பனை கைது செய்தனா்.

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

தவெக புதிய நிர்வாகக் குழு: விஜய் அறிவிப்பு

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜாதகரின் குணம் மாறுவது ஏன்?

நெருங்குகிறது தீவிர புயல்! ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மோந்தா!

மோந்தா புயல்: 100 ரயில்கள், ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT