சாத்தான்குளம் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு
சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப் தலைமை வகித்து 73 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மோ. தேவராஜ் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர் ரவிசின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் அந்தோணி சேவியர் ரெக்ஸ்ராஜ் நன்றி கூறினார்.