நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி ஆண்டு விழா
சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி 4ஆம் ஆண்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட், நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி 4ஆம் ஆண்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தொழிலதிபர் ரவி தலைமை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட் பொருளாளர் யுவராஜன் முன்னிலை வகித்தார்.
கிராண்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் தாளாளர் அமுதவள்ளி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கண்ணன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. (தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்) உமாமகேஸ்வரி ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
தொடர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, இடுப்பில் கயிறு கட்டி காரை இழுத்தல், ஸ்கேட்டிங்கில் பின்னோக்கி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர், மாணவிகளுக்கு கயத்தாறு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், கடம்பூர் இளைய ஜமீன்தாருமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்டைச் சேர்ந்த ஜோசப், மகேந்திரன், டிரஸ்ட் மகளிர் பிரிவு தலைவர் மகாலட்சுமி, டிரஸ்ட் செயலர் ஆண்டாள் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தொழிலதிபர்கள் ஆர். மகேஸ்வரன், பொன்பாண்டியன், பொன்ராஜ், விஜய்ஆனந்த், யோகா ஆசிரியர் ராமராஜா, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி தலைவர் தங்கமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளை சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன் தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் தேவா வரவேற்றார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமியைச் சேர்ந்த எம். மகேஸ்வரன் நன்றி கூறினார்.