ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடிகர் சமுத்திரக்கனி பங்கேற்பு
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில்
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் அருகே 15 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது; இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார். தொடர்ந்து, சிறுவர், சிறுமிகள் பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.