அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ நாரயணகுரு கல்வி வளர்ச்சிக் குழு சார்பில், புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர், மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, குழுத் தலைவர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். அருள்பாக்கியராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழுச் செயலர் பி.சங்கர் மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிச் செயலர் சோ.சங்கரன், பள்ளி மாணவர், மாணவிகள், பெற்றோர்கள், குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். மாரிக்கண்ணன் நன்றி கூறினார்.