காயல்பட்டினத்தில் மாவட்ட கபடி போட்டி தொடக்கம்
காயல்பட்டினம் கீழலெட்சுமிபுரம் வீமன் கபடிக்குழு சார்பாக நடைபெறும் சரவணக்குமார் மூன்றாம் ஆண்டு நினைவு மின்னொளி
காயல்பட்டினம் கீழலெட்சுமிபுரம் வீமன் கபடிக்குழு சார்பாக நடைபெறும் சரவணக்குமார் மூன்றாம் ஆண்டு நினைவு மின்னொளி கபடி போட்டியை திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
ஊர்த் தலைவர் மனோகரன், செயலர் முத்துக்குமார், பொருளாளர் தினேஷ்குமார், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் துணைச் செயலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 64 குழுக்கள் பங்கேற்கின்றன. 2 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான உணவுகளை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
போட்டி தொடக்கவிழா நிகழ்ச்சியில் திமுக மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை கீழலெட்சுமிபுரம் கபடி குழுவினர் செய்திருந்தனர்.